உன் நினைவே என் சுவாசமடி 21-25

அத்தியாயம்-21
ஜெபா இப்போது தான் முன்பைவிட அதிகமாக மோனலை காதலித்தான்.
முன்பு மனதில் நின்றவள் தன்னை வீழ்த்திய முதல் பெண் எனக்கு அவளை பிடிச்சிருக்கு ,கல்யாணம் பண்ணிக்கனும்னு என சிந்தித்தவன்
எல்லாம் கைகூடி வரவும் அதிரடியாக தாலிக்கட்டிக் குடும்பம் நடத்தினான்.
இப்போதுதான் மோனலின் காதலை உணர்ந்து அனுபவித்து காதலில் திளைத்து வாழ்ந்தான்.
எந்த எதிர்பார்ப்புமின்றி என்னை நேசித்திருக்கிறாள் என்ற புரிதல்
அவனுக்குள் வந்திருந்தது.
இருவருக்குள்ளும் புரிதல் இருந்தது .
ஆனாலும் சண்டை வரும் இரண்டு விசயத்திற்கு ஒன்று ஜெபாவின் சிகெரட் பழக்கம் நிறைய குறைத்திருந்தான் என்றாலும் எப்பவாவது அதை கையிலெடுக்கும்போது அவளுக்கு ஆற்றாமையாக இருக்கும் அப்போது அவனுடன் பேசமால் இருப்பாள்.
மற்றொன்று எதாவது குற்றவாளிகளின் என்கவுண்டர், இல்லைனா கேஸ் விசயமா கொஞ்சம் பிடிவாதமா நடந்துக்கறது இதெல்லாம் கேட்டா அதுக்கு சண்டை போடுவா.
தமிழில் வார்த்தைகள் வராது. அதுக்காக மராத்தியில் பொரிந்து தள்ளுவாள்.
நீங்க அந்த குற்றவாளியை மட்டுந்தான பாக்குறீங்க. அவங்க பிள்ளைங்க குடும்பம் அநாதையா நிக்கும் என்ன போலன்னு பேசிட்டே இருப்பா.
ஜெபாவிற்கு அவள சமாதானப்படுத்துறக்குள்ள
பேதும் போதும் என்றிருக்கும்.
அவளுக்கு அங்கயே ஒரு இஞ்ஜினியரிங்க் காலேஜ்லயே வேலைக்கிடைக்க வேலையில் சேர்ந்து கொண்டாள்.
இப்படியாக அவர்களின் நாட்கள் நகர
மோனலினால் கல்லூரி நேரத்தை தான் சமாளிக்க முடியாமல் திணறினாள்.
அவள் படித்தது வேலைபார்த்தது எல்லாமே புனேயில்தான். அங்கே கல்லூரி நேரம் காலை எட்டு மணியிலிருந்து மதியம் இரண்டு மணிவரைக்கும்தான் .
இங்கோ ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை.க்ஷஎதோ டபுள் சிஃப்ட் பார்த்திட்டு வர்ற மாதிரி உணர்ந்து சோர்ந்து வருவாள்.
சமையலுக்கு என்று ஆள் வைத்துவிட்டான். ஜெபா நினைத்தது இந்த கல்லூரி நேரங்கூட நல்லதுதான்
என்று ஏன் எனில் அவளின் எண்ணங்கள் பழையை விசயங்களை யோசிக்காமல் இருப்பாள் என்று.
இப்படியாக ஒரு மூன்று மாதம் கடந்திருக்க காலையில் எழும்போதே அவளுக்கு கண்ணெல்லாம் இருட்டி அப்படியே கிறக்கிதள்ளியது.
அவளுக்குமே இரண்டு மூன்று நாட்களாகவே நாட்கள் தள்ளிபோகுதோ என்றவொரு சந்தேகம் இருந்தது. முதலில் அறியாமல் இருந்தவள் இப்போது எல்லாம் அறிந்து வைத்திருந்தாள்.
அமைதியாக ஜெபாவின் பக்கத்துலயே மீண்டுமாக வந்து வந்துப்படுத்துக் கொண்டாள்.
ஜெபா தன் உடற்பயிற்சிக்காக எழும்பியவன், இன்னும் மோனல் எழும்பாமல் இருக்க மெதுவாக தட்டி எழுப்பி காலேஜ்க்கு நேரமாகிட்டு என அழைக்க எனக்கு டயர்டா இருக்கு நான் இன்னைக்கு போகல என சொல்லவும், ஏற்கனவே அவள் ரெம்ப சோர்ந்துபோறது தெரிஞ்சவன் விட்டுவிட்டான்.
அவள் நல்ல துக்கத்தில் அவன் அவளைத் தொந்தரவு செய்யாமல் கிளம்பி சென்று விட்டான்..
அவன் சென்றதும் கிட்டதட்ட பதினோரு மணிவாக்கில் எழுந்து கிளம்பி வெளியே சென்று வந்தவள் அவள் வாங்கி வந்ததை பயண்படுத்தி உறுதி செய்துகொண்டாள்.
மனம் சந்தோசத்தில் குதித்தாலும் பயம் போனதடவை மாதிரி எதாவதுன்னா எப்படி ,ஜெபா எவ்வளவு சந்தோசப்பட்டாங்க கடைசியில கஷ்டமா போச்சுதே என்று பலவாறு சிந்தித்து அவனிடம் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று தப்பா சரியா முடிவெடுத்து தன் வயிற்றில் கைவைத்து அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டாள்.
மாலை எழுந்தவள் நல்ல முகம் எல்லாம் கழுவி பிரஷ்ஷப் செய்து வந்து உட்கார்ந்து கொண்டாள்.
வீட்டுக்கு வந்தவனிடம் ஒன்றுமே சொல்லாமல் மறைத்துக்கொண்டாள்.
இன்னும் கொஞ்சநாள் கழித்து சொல்லனும், திரும்பவும் ஏமாற்றம் ஆகிட்டுனா கனவவன் கஷ்டப்படுவான் என்று மறைத்தாள்.
இப்படியாக நாட்கள் ஒரு மாதம் கடந்து இப்போது நான்காவது மாத ஆரம்பத்திருந்தது...
அதற்குமேல் அவளால் மறைக்க முடியவில்லை. அந்த ஒரு மாதமும் ரெம்ப கஷடப்பட்டுவிட்டாள். அதுவும் இரவின் தனிமைப்பொழுதுகளில் அவனது தேடல்களின் தீவிரத்தில் பயந்தே போவாள் வயித்துல பிள்ளைக்கு எதுவும் ஆகிடுமோவென .
அன்று தெளிவா யோசித்தவள் அவளோட எல்லா ரிப்போர்ட்ஸ்சும் எடுத்து வைத்தாள் வெளியே.
ஆமாம் கல்லூரியில் கூட வேலைப்பார்பப்பவரின் உதவியால் ஒரு பெண் மருத்துவரிடம் சென்று எல்லா பரிசோதனையும் செய்திருந்தாள். அதுகூட ஒரு அழாகான கார்டு வாங்கி
வாழ்த்து எழுதியும் வைத்திருந்தாள் ஜெபாவிற்கு.
கனவனது வரவை எதிர்பார்த்து காத்திருந்தவள் நேரம் கடந்துபோகாமல் இருக்க தன் போனை எடுத்து பார்த்துகொண்டிருக்க புது நம்பர்ல இருந்து அழைப்பு வரவும் பேசவில்லை.
அடுத்து அவளது வாட்ஸப்பிற்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்தவண்ணமாக இருக்க யோசனை செய்தவள் அதை திறந்து பார்க்க அதிர்ச்சியில் எழும்பியவள் தலைசுத்தவும் அப்படியே மயங்கி படுக்கையிலயே விழுந்தாள்.
ஜெபா கொஞ்சம் நேரங்கடந்து வந்தவன் இடது கையில் சிறுகட்டு போட்டிருந்தது அவ்வளவுதான்.
வீடுவந்தவன் ,வீடு அமைதியாக இருக்க அவளுக்கு அழைத்து பார்த்துவிட்டு தன்னிடம் உள்ள சாவியின் மூலம்
கதவைத்திறந்து அறைக்குள் வந்தவன்
கண்டது மயங்கிகிடந்த மனைவியைத்தான் ஓடிவந்து அவளைத்தூக்கி தட்டிப்பார்க்க அவளிடமிருந்து ஒரு அசைவும் இல்லை
அவள் கையில் மொபைலை இறுக பிடித்திருந்தாள் அதை பிடித்து இழுத்து தன் பாக்கெட்டில் வைத்தவன் .
அவளைத்தூக்கி தன் போலிஸ் வாகனத்தில் வைத்து அவனே ஓட்டிச்சென்றான்.
மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அங்கயே அவள் பக்கத்தில் இருந்தான்
ஒரு மணிநேரம் கழித்து வந்த பெண் மருத்துவர் " அதிர்ச்சியில மயங்கியிருக்காங்க சார். நல்லவேலை
வயிற்றில் இருந்த குழந்தைக்கு ஆபத்து எதுவும் இல்லை. எங்க ட்ரீட்மெண்ட் எடுக்கறீங்க எனக்கேட்க "
ஜெபா சட்டென எழும்பி நின்றவன் குழந்தையா எனக்கேட்டுவிட்டான்.
மருத்துவர் " இன்னும் கன்பார்ம் பண்ணலையா , அவங்க கர்ப்பமா இருக்காங்க சார். வாழ்த்துகள் என்று அவருக்கு கைக்கொடுத்து சொன்னவர்.
ரவுண்ட்ஸ்க்கும் சென்றுவிட்டார்.
ஜெபா உச்சக்கோபத்தில் இருந்தான்.
என்ன செய்ய அடக்கிக்கொண்டு அவள் எழும்பும் வரை அமைதியாக இருந்தாவன். அவளது மொபைலை எடுத்து உள்ளே சென்று பார்த்தவன் புரிந்துக்கொண்டான்.
சிறிது நேரத்திற்கு முன்பாக நகரில் நடந்த ஒரு கலவரத்தில் வேண்டுமென்றே
அவனருகில் வந்து அவறைத் தாக்கவர அதை தடுத்தவனிற்கு இடது கையில் லேசாக இரத்தக்காயம் அவ்வளவுதான்.
அதை பெரிய பிரச்சனையாக போட்டோ எடுத்து மோனலுக்கு அனுப்பபட்டிருந்தது.
உடனே அவர்களது எமர்ஜென்ஸி டிபார்ட்மெண்ட்க்கு அழைத்து அந்த நம்பரை ட்ராக் செய்ய சொன்னவன். அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் எழும்பியதும் மருத்துவர் வந்து அவளிடம் கேள்விகள் கேட்கும்போதே தெரிந்துக் கொண்டான் அவளுக்கு எல்லாம் தெரியும் ,தன்னிடம் மறைத்துவிட்டாள் என்று .
மருத்துவர் வீட்டிற்கு போகலாம் என்றும் எதுக்கும் நாளை காலை வந்து ஒரு ஸ்கேன் எடுத்திருங்க என சொல்லி வீட்டிற்கு செல்ல அனுமதித்தார்.
ஜெபா ஒரு வார்த்தை கேட்கவில்லை.
வீட்டிற்கு திரும்பி வந்ததும் பசியினால் அவன் பழங்களை எடுத்து சாப்பிட வெட்டிக்கொண்டிருக்கவும் மோனல் அவனிடம் பேச வந்தாள்
" மச்சான் " என அழைக்கவும் கத்தியை தன் உள்ளங்கையில் வைத்து அழுத்தினான், அவள் இன்னும் வர கத்தியை இன்னும் அழுத்தினான்
அவன் உள்ளங்கையில் இருந்து இரத்தம் வந்தது,
அப்படியே நின்றாள் , அவள் இன்னும் கிட்ட நெருங்கையில் இன்னும் கத்தியை மறுபடியும் அழுத்தவும் , மோனல் புரிந்துக்கொண்டாள் அது அவள்மேல் உள்ளக் கோபத்தின் விளைவு..
அப்படியே பின்வாங்கி உள்ளே சென்று படுக்கையில் கவிழ்ந்து அழத்தொடங்கினாள்.
ஜெபாவின் கண்களிலும் கண்ணீர் என்ன காரணமாக இருந்தாலும் என்கிட்ட சொல்லிருக்கனும் என அவனது முடிவில் உறுதியாக நின்றான்.
அவன் அப்படியே வெளியறையில் படுத்துக்கொண்டான். மோனல் அதிகாலையிலயே எழும்பி சத்தமில்லாமல் மெதுவாக வரவும் அவளது கொலுசின் சத்தம் அவனுக்கு கேட்டதும் அலர்ட் ஆனவன் அமைதியாகவே கண்ணை மூடி படுத்திருந்தான். வந்தவள் மெதுவாக அவன் உள்ளங்கையை பார்க்க கத்தி ஆழமாக வெட்டியிருந்தது
அதைப்பார்த்ததும் வந்த அழுகையை தன் கைகளால் வாயைமூடி அடக்கி அழுதாள் மெதுவாக சென்று மருந்து எடுத்துவந்து போட்டுவிட்டவள் அப்படியே போய் படுத்துக்கொண்டாள்.
அவனும் எதுவுமே சொல்லாமல் படுத்துக்கொண்டான். காலையில்
சமையல் பண்றவங்க வந்ததும் எழும்பி போய் டீ கேட்டுவாங்கி குடித்தான்.
அவளும் இரவிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்று தெரியும் சாப்பாடு ரெடி ஆனதும் அவளை அழைக்க சொல்லி சமையல் பண்றவங்க வந்து அவளை அழைத்தார்.
" எனக்கு எதுவும் வேண்டாம் பசியில்லை"என மறுபடியும் படுத்துக்கொண்டாள்.
இதைக்கேட்டு வெளிய வந்தவன் அப்படியே தன் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
வண்டி சத்தம் கேட்டு வெளியே வரவும்
அவன் கிளம்பிபோய்விட்டிருந்தான்.
ஐயா சாப்பிடாமா போய்ட்டாங்க என சமையல்காரம்மா சொல்லவும் அவசரவசரமாக அவனுக்கு போனில் அழைக்க அவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
அப்படியே வெளியில் கதவில் சாய்ந்து அவன் சென்ற திசையை நோக்கியவண்ணமாக கண்கள் இருக்க அப்படியே சிலையாக நின்றாள். அவளது கவனம் எதுவும் அங்கில்லை.
சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன், அவளைப் பார்த்தவன், அவளது ஓய்ந்த தோற்றமே சொன்னது அவனது செயல் அவளைக் காயப்படுத்துகின்றது என்று, இருந்தாலும் அவளின் செயல் நினைத்து நினைத்து அவனுக்கு மனமே விட்டுப்போயிற்று. எதுக்கு பிள்ளை விசயத்தை சொல்லாம மறைச்சா ஒரு மாசத்திற்கு மேலாக.
உள்ள வந்தவனை பார்த்தவள் சாப்பாட்டை அவசரமாக தன் தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவனும் உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தவன்,தன் அறைக்குள் நுழையப்போக அங்கிருந்த டேபிளில் இருந்த மெடிக்கல் ஃபைல் எடுத்துப்பார்க்க அதிலிருந்த வாழ்த்து அட்டை கீழே விழ எடுத்துப் பார்த்தவனுக்கு கண்கள் கலங்கியது அவள் அழகாக ஆங்கிலத்தில் அவன் தகப்பானாகப்போவதை வாழ்த்தி எழுதியிருந்தாள். அதை எடுத்த தன்னுடைய கப்போர்டில் பத்திரமாக வைத்து பூட்டியவன் திரும்பி வந்து
" சாயங்காலம் ஹாஸ்பிட்டல் போகனும் ரெடியா இரு " என எங்கயோ பார்த்து கூறிவிட்டு சென்றுவிட்டான்.
அவளுக்கு யோசனை இந்தவிசயத்தை அனும்மாவிற்கு அழைத்து சொல்லுவோமா என்று, பின் அதுக்கும் கோவபட்டா என்ன பண்றது என தனது அறையில் முடங்கியவள் சாயங்காலம் வரைக்கும் தூங்கியே கழித்தாள்.
மாலை வந்தவன் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுக்க போனதும் அவளுக்கே பயம்தான் வயிற்றில் பிள்ளை நன்றாக இருக்கவேண்டும் என்று, அவனும் அதையேத்தான் வேண்டினான்.
கடவுள் அவர்களின் பிரார்த்தனையை இரு காதுகொடுத்து கேட்டுவிட்டார் போல.
ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் வந்ததும் மருத்துவரைப் பார்க்க உள்ளே செல்லவும் ,அனிச்சையாக அவனது கையைப் பிடிக்கப்போக அவன் தனது கையை தனது பேன்ட் பாக்கெட்டிற்குள் நூழைத்துக் கொண்டான் மோனல் விக்கித்துப் போனாள்.
மருத்துவர் பேசுவது ஒன்றுக்கூட அவளின் காதில் ஏறவில்லை , ஜெபாதான் நிறைய கேள்விக்கேட்டு
சந்தேகம் தீர்த்துக் கொண்டான்.
" என்ன குழந்தை நல்லயிருக்கா என ஸ்கேன் எடுத்திட்டு, இப்போ உன் வயித்துல இரண்டு குழந்தை சந்தோசமா மோனல் " என்று டாக்டர் கேட்கவும்தான் உணர்வுக்கு வந்தவளுக்கு அவர் சொன்ன செய்தி உரைக்கவே சிறிது நேரமாகிற்று.
உணர்ந்ததும் எல்லா உணர்வுகளையும் ஒருங்கே காமித்தாள்.
மருத்துவரிடம் விடைபெற்று இருவரும் வெளியே வரும்போதே தனது தாய்க்கு அழைத்துவிட்டான். அவன் போனில் பேசிக்கொண்டே வந்தான் அவள்கூட வருவதைக்கூட கண்டுக்கொள்ளவில்லை.
அவளுக்குமே இப்போது மனதில் என்னடா வாழ்க்கை இது,ச்ச் ஏற்கனவே பல கஷ்டங்கள் பார்த்தாச்சு, இத பாதியில வந்த சந்தோசம் பாதியில போயிட்டு என நினைத்தவளுக்கு இப்போ அழுகை கூட வரவில்லை..
அவன் கூடவே நடந்தாள், அவன் வண்டிக்கு அருகில் வரவும் ஒரு ஆட்டோவை அழைத்து அவளைப்போகச் சொல்ல. அவனைப்பார்த்தவள் அப்படியே நடக்க ஆரம்பித்தாள் எதுவுமே சொல்லாமல்.
ஜெபாவிற்கு இன்னமும் சுறுசுறுவென்று மண்டைக்கு ஏறியது கோபம். அவளின் பின்னோடு வந்தவன் அவள் கைகளைப் பிடித்து இழுத்து " என்னடி எல்லார் முன்னாடியும் கேவலப்படுத்த நினைக்கிறியா நடந்துப்போற "என்று யாருக்கும் தெரியாத வண்ணம் அடிக்குரலில் சொன்னவன். வண்டியில் ஏறு நான் கொண்டு விடுறேன் என்றழைத்துகொண்டு வீட்டில் விட்டான்.
அவனுக்கு அவனது வேலையில் பல டென்சன் மோனலுக்கு குறுஞ்செய்தி அனுப்பின ஆள் யாரு. அதுவும் எனக்கு அடிபட்டது லேசானதுதான் அத பெருசா மோனலுக்கு அனுப்பி எதோ பிளான் போட்ருக்காங்க அவ மயங்கி விழுந்ததுனால பிரச்சனையில்ல.
என்னைத்தேடி வெளிய வந்திருந்தா
என்னவாகிருக்கமோ. அந்த நம்பர் இப்போது உபயோகத்தில் இல்லை என வரவும் ,அதனோட எல்லா தகவலும் சேகரித்தான், அன்றைக்கு நடந்த பிரச்சனையில் என்னைத் எதுக்கு தாக்கினாங்க என எல்லாம் சேகரித்திருந்தான்.
இப்படியாக ஒருவரை ஒருவர் தவித்து வாழ , ஒருமாசம் கடந்தநிலையில்
மீண்டுமாக செக்கப்பிற்கு அழைத்து சென்று வந்தவன் அழைத்தது அவனது வீட்டிற்குத்தான்.
அவர்களிடம் பேசி முடித்துவிட்டு வந்தவன் வெளியே நின்று சிகரட் பிடிக்கவும் மோனல் வந்து அவனைத்தான் பார்த்து நின்றாள் அவனது இடதுகையில் அவள் கொடுத்த பரிசு இல்லை , அவள் ஏதோ பேசவரவும் சிகரட்டால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டான் , அவள் மீண்டும் நெருங்கி வந்தாள் அவன் தன் கையில் சூடுவைக்கப் போக அதில் தன் கையை வைத்திருந்தாள் மோனல் அதை அவன் எதிர்பார்க்காவில்லை அவளது கையில் பட்டுவிட்டது, அய்யோ அவளைவிட அவன் துடித்துப்போனான்
அத்தியாயம்-22
மோனலின் கையில் சிகரட்டின் சூடு வட்டமாக விழுந்திருந்தது ,மெதுவாக
ஊதி ஊதி மருந்திட்டுக்கொண்டிருந்தான்.
மோனல் மருந்திடும் அவனைத்தான் பார்த்திருந்தாள் இவ்வளவு பாசம் காதல் வச்சிக்கிட்டு பேசாம இருக்கறதைப்பாரு.
அவனுக்குத் தெரியும் பேசினா சண்டை பெருசா வரும் வார்த்தையிலயே அவள வதைச்சிடுவான்,அதுக்காகத்தான் அவன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டான்.
அவ வீம்புக்கு இப்படிச் செய்வானு யாருக்குத் தெரியும்.
மருந்திட்டு முடிந்ததும் அவள் சரிந்து படுத்துக் கொண்டாள். இப்போதும் அவன் அவளிடம் பேசவில்லை அப்படியே அவளது பக்கத்தில் படுத்துக்கொண்டான்.
இருவருக்கும் வேதனையான விசயம்தான்.
ஒரு மாதமாக அவன் வெளியே ஹாலில்தான் படுத்திருந்தான் இன்றுதான் உள்ளே வந்து படுத்தான்.
மோனல் நன்றாக தூங்கிய பின்பு திரும்பி படுத்து அவளைத்தான் பார்த்திருந்தான்.
ஐந்து மாதம் என்பதால் வயிறு நன்றாக மோடிட்டிருந்தது. மெதுவாக அவளது வயிற்றினைத்தொட்டு தடவியவன் தன் பிள்ளைகளிடம் " குட்டீஸ் ,உங்கம்மா நீங்க வந்ததக்கூட அப்பாக்கிட்ட சொல்லாம மறைச்சிட்டாங்க. நல்லவேலை நீங்க இப்போ பத்திரமா இருக்கீங்க. அப்படியே அப்பாக்கிட்டயும் பத்திரமா வந்திருவீங்களாம், அப்பா உங்களுக்காக காத்திருக்கேனாம் " என பேசினான்,
அவன் பிள்ளைகளும் வயிற்றில் உருள
மோனல் மெதுவாக அசைந்தாள்.
ஜெபா சட்டென தன் இடத்தில் வந்து படுத்துக்கொண்டான். அடுத்தநாள் காலை மெதுவாக எழும்பி வந்தவள் கண்டது மொத்தாக் குடும்பமும் அவளைக் காண வந்திருந்தானர்.
மோனலுக்கு இப்போது அவன் பேசாமலிருப்பதின் வருத்தம் கொஞ்சமாக குறைந்தது.
அனும்மா என ஓடிவந்து அவரைக் கட்டிக்கொண்டாள். அவளது கண்களிலிருந்து தானக கண்ணீர் வந்துக்கொண்டிருந்தது.
அனுராதா சத்தம்போட்டார் " ஏன் அழுத
வயித்துல பிள்ளைய வச்சிகிட்டு இப்படியா அழுவாங்க..கண்ணைத்தொட " என்றவர் அவளை அழைத்துச் சென்று சாப்பாடுக்கொடுக்க நல்ல சாப்பிட்டாள். நிறைய நாள் கழித்து
சாப்பாடு இப்போதான் ஒழுங்கா சாப்பிட்டாள்.
ஜீவாவின் குட்டீஸ் இரண்டும் மோனலையே சுத்தி வந்து அவளை கொஞ்சநேரங்கூட சும்மா இருக்க விடமாட்டானுங்க.
சனி ஞாயிறு இங்கு இருந்துவிட்டு
அனுராதாவைத்தவிர மற்றவர்கள் கிளம்பிவிட்டனர்.
மோனலும் வேலைக்கு செல்வதால் காலையிலயே எழும்பி அனுராதாவுடன் பேசிக்கொண்டிருப்பாள்.
சமையல் பண்றதுக்கு ஆள் வந்ததும் மெதுவாக இரண்டு பேரும் சிறிது தூரம் நடந்துவிட்டு வருவார்கள்.
அனுராதா மெதுவாக " ஜெபாவிற்கும் உனக்கும் என்ன பிரச்சனை " என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.
மோனல் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டாள்.
" எதுக்கு கேட்டேன்னா ,கிட்டதிட்ட நீ கர்ப்பமாயிருக்கனு நாலுமாசத் தொடக்கத்துலதான் எங்களுக்கு தகவல் சொன்னீங்க, அதைவிட எங்கள அவன் வரவேண்டாம்னு சொல்லிட்டான். அவனுக்குத் தெரியாமத்தான் இந்த தடவை நாங்க வந்தோம். வந்து பார்த்தா இரண்டுபேரும் ஒருத்தரொருத்தர் பேசிக்கவேமாட்டுங்கீங்க " என்று பேச்சைத் நிறுத்தினார்.
மோனல் எதுவுமே சொல்லாமால் நின்றாள் அவள் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.
அனுராதா பேச்சை மாற்றினார்
ஹாஸ்பிட்டல் இனி எப்போ போகனும், அடுத்த செக்கப் என்றைக்கு போகனும் என்று. அப்படியே பேசிக்கொண்டே வீடு வர அங்க ஜெபாவும் உடற்பயிற்சி ரவுண்ட்ஸ் எல்லாம் முடித்து வந்திருந்தான்.
மோனல் காலேஜ்க்கு கிளம்பி வரவும் எல்லாரும் சாப்பிட உட்காரும்போது
அனுராதா பேசினார்.
" ஜெபா என்ன பிரச்னையாக இருந்தாலும் நம்ம அன்பா இருக்கவங்ககிட்ட இறங்கி போறதுல தப்பில்லை ,அதைவிட முக்கியம் எப்பவுமே கனவன் மனைவிக்கு இடையில மூன்றாவதா யாரும் உள்ள நுழையக்கூடாது ,அது தாய் தகப்பனா இருந்தாக்கூட. அந்தளவுக்கு நீ பிரச்சனைய பெருசாக்கமாட்டனு நினைக்கிறேன்"
ஜெபா சட்டென்று கோபம் வந்தவனாக மோனலைப் பார்க்க ஒரு நிமிடம் அரண்டுவிட்டாள்.
" அவள எதுக்கு பார்க்க நான்தான் நீங்க இரண்டுபேரும் இருக்கறது சரியில்லனு கேட்டேன் அவ நான் கேட்டதுக்கும் பதில் சொல்லல. என்ன பிர்ச்சனைனாலும் பேசித்தீர்த்துக்கனும்.
வயித்துல பிள்ளைய வச்சிக்கிட்டு சந்தோசமா இருக்கனும் இப்படியா.
சண்டை போட்டு கஷ்டப்படுத்துவாங்க "
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அப்படியே அமர்ந்திருந்தான். மோனல் மெதுவாக எழும்பி வெளியே கிளம்பி தன் கல்லூரி பஸ்ஸிற்காக காத்திருந்தாள். மனதின் சோர்வு அப்படியே முகத்தில் பிரதிபலித்தது.
மோனல் சென்றதும் அனுராதா ஜெபாவை ஒருவழி ஆக்கிவிட்டார்.
தாய்தகப்பான் இல்லாம வளர்ந்த பிள்ளை, அவள நம்ம வீட்டுக்கு வந்தபிறகு எப்படி பார்த்துக்கனும் நீ.
உன்ன நம்பி வந்த பிள்ளைய இப்படித்தான் வச்சிருப்பியா. ஆயிரம் உறவு இருந்தாலும், நீ பார்த்துக்கற மாதிரி வருமா. "
ஜெபா பொருமை இழந்தவன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்.
அனுராதா " ஒரு பொண்ணுக்கு பெரிய சந்தோசமே பிள்ளைவரம்தான் அத உன்கிட்ட மறைக்கனும்னு நினைச்சிருக்க மட்டா. கொஞ்சம் நாள் கழிச்சி சொல்லலாம்னு இருந்திருப்பா .
அதுக்குள்ள உனக்கு தெரிஞ்சிருக்கும் "
ஜெபா " எதுவேணா இருக்கட்டுமா. என்கிட்ட முதல்ல சொல்லனும்னு எனக்கும் ஆசை இருக்கும், அவா சொல்லிருந்தா பின்னாடி வர்றது எதுவா இருந்தாலும் சமாளிச்சிருப்பேன் எனக்கு கோவத்தைவிட வருத்தமா இருக்கும்மா "என்று சொல்லி அவர் முகத்தைதான் பார்த்திருந்தான்.
அவ பக்கம் காரணத்தை கேட்காம நீ இப்படி இருக்கது தப்பு அவ்வளவுதான்
அவ அப்படியே மறைச்சிருந்தாலும் உன் மனைவியை மன்னிக்க உன்னால முடியலன்னா ,நீ என்ன அன்பா இருக்க அவ மேல என்று சாடினார். அவர் சொல்றதும் சரிதான.
இப்பொது கொஞ்சம் மனசு லேசாக உணர்ந்தவன் அப்படியே கிளம்பி வண்டியில் வெளியே வரவும் மோனலின் பஸ் வரவில்லையென அமர்ந்திருக்க அவளருகில் வண்டியை நிறுத்த சொல்லி அவளை பார்த்து " வா நான் கொண்டுவிடுறேன் " என அழைத்தான்.
மற்றவர்களின் முன்பு காட்சிப்பொருளாக விரும்பாமல் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
கல்லூரியில் இறக்கிவிட்டவன் அவள் எதுவும் சொல்லுவாள் என்று பார்க்க அவள் திரும்பியே பார்க்கமல் சென்றுவிட்டாள்.
அவனும் பெருமூச்சொன்றை விட்டு கிளம்பி அவனது ஆபிசுற்குள் சென்றவன், முக்கியமான ஃபைல் தேடினான்.
கல்லூரியில் இடைவேளை நேரத்தில் தான் கொண்டுவந்த புத்தகத்திற்கு இடையே வேற எஏதோ ஃபைல் இருக்க எடுத்து பார்த்தவள் அது தன் கனவனுடையது என தெரிந்து.
தன் கனவனுக்கு ஃபோனில் அழைக்கவும், அவன் இந்த நேரத்தில் எதுக்கு கூபபிடுறா என பயந்து அழைப்பை எடுத்தவன் " டாலி , உனக்கு ஒன்னுமில்லையே, வயிறு எதுவும் வலிக்குதா என்ன பண்ணுது எனக் கேட்கவும் அவளுக்கு தன்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் அப்படியே விழுந்தது.
" ஹலோ,ஹலோ லைன்ல இருக்கியா " என பதற்றத்துடன் அவன் குரல்.
தன்னை சரிப்படுத்திக் கொண்டு
" எனக்கு ஒன்னுமில்லை உங்க ஃபைல், வண்டியில புக்ஸ் வச்சிருந்தேன் அதுகூட என்கிட்ட வந்திட்டு. அதுக்குத்தான் ஃபோன் பண்ணேன். நீங்க தேடுவீங்கனு நினைச்சேன் "
" ஓ..ட்ரைவர அனுப்புறன் குடுத்துவிடு வைக்கிறேன் " என அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
அந்த ஃபைலை இப்போது புரட்டிப்பார்த்தவள் கண்கள் தெறித்துவிழும் அளவிற்கு அதிர்ச்சி.
இதுக்கு ஒரு முடிவு செய்யனும் என் குடும்பத்துல இருந்து அடுத்து ஒரு உயிரா....
கல்லூரி விட்டு வீட்டிற்குள் வந்தவள், அனுராதாவிடம் சில ஆலோசனை செய்தவள் எல்லாம் ரெடி செய்தவள் கனவனின் வரவிற்காக காத்திருந்தாள்.
இரவு கனவன் வந்ததும் மெதுவாக அவனின் முன்பு நின்றாள். அவன் நிமிர்ந்து பார்த்தவன் புருவம் சுருக்கி பார்க்க..
" காலையில அந்த ஃபைல் நான் படிச்சிப்பார்த்தேன், நான் கொஞ்சம் அவங்ககிட்ட பேசனும் என்ன அங்க கூட்டிட்டுப் போங்க. "
ஜெபா தன் கையைகாட்டி நிறுத்து என சொல்லியவன் படுக்கையை காட்டி படு என்று கையை காமித்தான்.
" மோனலுக்கு கோவம் வந்து நீங்க வந்தாலும் வரலனாலும் நான் போறேன்
நாளைக்கு " என சொல்லி படுத்துக்கொண்டாள்.
மனசுக்குள்ள நினைச்சான் திமிரும் பிடிவாதமும் நான் வரமா எப்படி போறேன்னு பாக்குறேன் என அவனும் படுத்துக்கொண்டான்.
காலையில் எழும்பியதும் அவள் கிளம்பிக் கொண்டிருந்தாள் தன் பேக் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
கண்விழித்ததும் பார்த்தது..
அவள் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்ததைத்தான்.
பார்த்தும் பார்க்காத மாதிரி தயாராகி வெளியே சென்றுவிட்டான்.
மோனல் நம்ம சொன்னதுக்கு எதாவது
ரியாக்க்ஷன் இருக்கபாரு என நினைத்து கோபத்தில் வீட்டின் முன்பக்கம் வந்து அமர்ந்துக்கொண்டு
டிக்கட் கேன்சல் பண்ணிட்டிருந்தாள்.....
அனுராதா வந்து எவ்வளவு பேசிப்பார்த்தும் அவள் அசையாமல் அப்படியே ஒன்றும் குடிக்காமல் அமர்ந்திருந்தாள்.
தன் உடற்பயிற்சி எல்லாம் முடித்து வந்தவன் அவள் இருப்பதைப் பார்த்து
" என்ன இங்க உட்கார்ந்திருக்க " அதட்டவும் ஒன்றுமே சொல்லாம அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
உள்ளே செல்லவும் அனுராதா
மருமக சொல்றதையும் கொஞ்சம் கேளேன் அவளும் உன் நல்லதுக்குத்தான சொல்றா உன்ன நினைச்சியும் அவளுக்கு பயம் இருக்கும் என்க.
அம்மா " அவா சொல்றமாதிரி செய்தா நான் எதோ அவனுக்கு பயந்து என் பொண்டாட்டிய தூது அனுப்புன மாதிரி பேசுவானுங்க நான் என்ன தைரியமில்லாது முட்டுக்கு செத்தவனா
அவன் கால்ல விழ "
இவர்கள் பேசும் சத்தம் கேட்டு உள்ள வந்த மோனல் " ஒரு பையன இழந்திட்டு அவங்க விட்ட கண்ணீரோ என்னவோ என் வயித்துல பாப்பா வந்த சுவடே
இல்லாம போயிட்டு. இப்போ அடுத்ததும் இதையே செய்தா அந்தப்பாவம் என் பிள்ளைங்களுக்கு வந்திருமோ என பயமா இருக்கு " என தன் வயிற்றில் கைவைத்து அழுதாள்.
ஜெபா ,அனுராதா இரண்டுபேருக்குமே என்ன செய்றது எனத் தெரியவில்லை .
அவன்தான் அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.
அவளோட மென்மையான இதயம் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்று
நினைக்கின்றது அதுதான் இங்கு பிரச்சனையே.
மெதுவாக அவளை விடுவித்தவன்'சரி உனக்காக நான் வர்றேன். பிரச்சனை கைமீறி போயிட்டுனா அதுக்கு நான் பொறுப்புகிடையாது. இன்னைக்கு போகவேண்டாம் நாளைக்கு போகலாம்
என்றவன் கிளம்பி தன் ட்யூட்டிக்கு சென்றுவிட்டான்.
மோனல் மும்பையில் உள்ள தங்களின் சொத்துக்களை பார்த்துக்கொள்ளும்
வக்கீலுக்கு அழைத்து என்ன செய்யவேண்டும் என்றும் தான் அங்கு எப்போது வருவேன் என்றும் பேசி வைத்தவளுக்கு மனதிற்குள் சிறு நிம்மதி..
அடுத்த நாள் கிளம்பி மும்பைக்கு செல்லும் விமானத்தில் இருவரும் இருந்தனர்.
அங்கு சென்று இறங்கியதும் அவளுக்கு சிறிது பயமே ஏதும் அசம்பாவிதம் நடந்திருமோவென்று. ஜெபாவின் கைகளை கெட்டியாக பிடிக்கவும் அவன் அவள் கையையத்தான் பார்த்தான், அவள் மெதுவாக தன் கைகயை விலக்கி கொள்ள என்ன நினைத்தானோ அவனாகவே அவள் கையைப்பிடித்து நடந்தான்.
தங்களுடைய வீட்டிற்கு செல்லவும் அங்கு ஏற்கனவே வக்கீல் காத்திருந்தார் அவரிடம் சிறிது பேசிவிட்டு எல்லாரையும் வரச்சொன்ன நேரத்திற்கு சரியாக வந்திருந்தனர்.
ரஞ்சிதாவும் பிள்ளைகளும், நாயகியும் சரவணப்பெருமாளும் ,அவனின் கண்களில் வெறியிருந்தது.
ஜெபா தன்னை வக்கீலிடம் அறிமுகம் செய்துகொண்டான். மோனல் இப்போது பேச ஆரம்பித்தாள்.
" தாத்தாவும் ஆச்சியும் எனக்கு எழுதி வச்ச சொத்துக்கள் எல்லாம் எங்கப்பாவிற்கு சேரவேண்டியது,அதத்தான் என்னோட பேருக்கு எழுதி வைச்சாங்க. எங்கப்பா அம்மா உயிரோடிருந்தா அவரோட சம்பாத்தியத்துல இன்னும் எனக்கு சொத்து சேர்த்து தந்திருப்பாங்க.
எனக்கு சரியான விதத்துல வந்து சொத்துக்கு நீங்க எதுக்கு ஆசைப்படுறீங்க. என கேள்விக்கேட்டு
பதிலுக்காக காத்திருந்தாள்.
ஒருவரும் பதில் சொல்லவில்லை.
எனக்கு மச்சான்க இரண்டுபேரும் செய்ததுக்கூட ஜீரணிக்க முடிஞ்சது.
ஆனால் ராஜபாண்டி சித்தப்பா பையன் என் தம்பி அவன்கிட்ட இதுவரைக்கும் நான் ஒரு வார்த்தைக்கூட பேசியிறாத தம்பி என்ன கொன்னு சொத்தடையனும்னு நினைச்சி மச்சான்கூட சேர்ந்து முயற்சி செய்திருக்கான். அவங்க இரண்டுபேரும் சேர்ந்து திட்டம்போட்டு எங்க இரண்டுபேரையும் கொல்ல பார்த்திருக்காங்க.
அதைத்தான் என்னால தாங்க முடியல.
என முகத்தைமூடி அழுதாள், ஜெபாதான் உன் கண்ணீருக்கு இவங்க தகுதியில்லாதவங்க அழாத அது என் பிள்ளைங்களையும் பாதிக்கும் என அதட்டினான்.
நாயகிகிட்ட வந்தவள் அவரின் கையைப்பிடித்து இதுவரை செய்ததிற்கு எல்லாம் நன்றி. உங்க பெரிய பையனோட இலட்சணம் உங்களுக்கு
தெரிஞ்சிருக்கும். உங்க சின்ன பையனும் அந்தப்பாதையிலதான் போயிட்டிருக்காங்க. அதை கொஞ்சம் சொல்லி வைங்க இல்ல மும்பை போலிஸ்லயிருந்து என்கவுண்டர் லிஸ்ட்லதான் வைப்பாங்க. தம்பியும் அவங்ககூட சேரந்திருக்கான்
உங்களுக்கு சொத்துக்காரியங்கள் வேணும்னா எங்கிட்டதானா பேசிருக்கனும். அது என்ன அவருமேல கைவைக்கிறது எனக்காக மட்டுந்தான் உங்க இரண்டுபேரையும் விட்டு வச்சிருக்காங்க என சரவணப்பெருமாளையும்,
ராஜபாண்டியனின் மகனையும் பார்த்து சொல்லவும்,ரஞ்சிதா கொஞ்சம் எகிறிப்பேசினாள்.
மோனல் திருப்பி பதில் கேட்டாள் உங்களுக்குத்தான் என்ன பிடிக்காதே அப்பறம் எதுக்கு என்னோட பேருல இருக்க சொத்து உங்களுக்கு.
சொத்து எல்லாம் நியாயமா எனக்கு வரவேண்டியதுதான் எனக்கு எழுதி வச்சிருக்காங்க.ஆனா அதெல்லாம் இத்தனை வருசமா அனுபவிச்சது நீங்கதான என ரஞ்சிதாவையும் பிள்ளைங்களையும் பார்த்து பேசியவள்.
எனக்கு தந்ததுல வேணா சில சொத்துக்களை உங்களுக்கு தர்றேன்.
ஆனா திரும்பவும் எங்களுக்கு தொல்லைத்தரக்கூடாது. எல்லாம் எனக்கு எழுத்து மூலமா வேணும்.
ரஞ்சிதா எங்களுக்கு இந்தவீடு இருக்கு அதுல நீ பங்கு கேட்காம இருந்தா சரிதான். மீதியெல்லாம் எப்படி வாங்கனும் என எங்களுக்குத் தெரியும் எனவும்
மோனல் " இந்த வீடு தாத்தா சாகுறதுக்கு முன்னாடியே என்னோட பேர்ல எழுதிட்டாங்க.எனக்கு எழுதிப்போக மீதி இருக்க எல்லா சொத்துக்கும் என்னையவும் ஒரு வாரிசா சேர்த்திருக்காங்க. நான் இல்லாம நீங்க ஒரு பொருளைக்கூட விற்க முடியாது.
ராஜபாண்டி இறந்தபிறகு ரஞ்சிதா தன் சொத்துக்களை விற்க ஆரம்பித்தார். அதைத் தெரிந்தகொண்ட சுப்பையா எல்லாவற்றையுமே மாற்றி எழுதியிருந்தார்.
என்னது என எல்லாருக்குமே ஆச்சர்யம்
அந்த வீடு அந்த ஏரியிவிலயே கோடிக்கணக்கான மதிப்புல போகும்.
சரவணப்பெருமாள் பேசினான் நல்லாதாபோச்சுது வந்தவ அப்படியே அதையும் எங்க பேருல எழுதி வச்சுட்டுப்போ வசமா வந்து மாட்டியிருக்க என்கவும்
மோனல் அதிரவும் , ஜெபா சிரித்தான் எப்படி மாப்பிள்ளைங்களா எப்பவும் மூளைய கழட்டி வச்சுட்டுத்தான் வேலை பார்ப்பிங்களோ என சொல்லி சிரித்தான்.
அத்தியாயம்-23
ஜெபா தன் இருக்கையில் இருந்தவாரேதான் பேசினான்.
மோனலை பார்த்து இன்னும் எதாவது பேச இருக்கா சீக்கிரம் பேசி முடி மச்சாங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசவேண்டியது இருக்கு என்று சொல்லவும்.
இந்த வீடு எங்கப்பாம்மா வாழ்ந்த வீடு இது யாருக்கும் விட்டு தர மாட்டேன்.
என் பேர்ல எழுதி வச்சிருக்குற கடைகளில் உங்க பேருக்கே மாத்தி வச்சிருக்கேன். மீதி எல்லாமே நான் லீசுக்கு விடப்போறேன். அத வக்கீல் அங்கிள் பார்த்துப்பாங்க.
நாயகி அத்தைக்கு ஆச்சி தந்த நகையை குடுத்திடுறேன் அப்படி சொல்லவும்.
நாயகி " எனக்கு நகையெதுவும் வேண்டாம் நம்ம வீட்ல இருந்து வெளிய வாழப்போனப்பிள்ளைங்ககிட்ட இருந்து வாங்கி பழக்கம் இல்லை குடுத்துதான் பழக்கம்.
உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா சொத்து வரும்னு ஆசைப்பட்டுத்தான்
பெரியவனுக்கும் உனக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணேன்.
ஒரு பிள்ளைய துள்ளதுடிக்க வாரிக்கொடுத்தாச்சு. இனி எனக்கு எதுக்கு நகை, சொத்து இருக்கறது போதும் தாயி வாயும்வயிறுமா வந்து நிக்க இங்கெல்லாரும் சொத்துக் கணக்கு பேசுறானுங்க. இவனுங்களுக்கு நீ இரக்கம் காட்டறதே நல்லதில்ல." அவரது பணத்திமிரும் ஆண்பிள்ளைங்க இருக்காங்க என்ற தெனாவட்டும் இருந்த இடந்தெரியாமல் அழிந்துப்போயிற்று
அப்படியே ஒதுங்கி அமர்ந்துவிட்டார்.
வக்கீல் " தாயி நாயகி மவன் இரண்டாவதுள்ளவன் இரண்டு மாசத்துக்கு முன்னாடியே என்கிட்ட வந்து பேசினான். இந்த வீட்டு தாய்பத்திரத்தை வச்சு அப்பவே அவங்கிட்ட எல்லாத்தையும் சொல்லியாச்சே "
அது தெரிஞ்சுத்தான் மாப்பிள்ளைங்க இரண்டு பேரும் உத்தரபிரதேசத்துல கிடக்க அடிமாட்டு பணம் கொடுத்தாக்கூட கொலை செய்யற கும்பல் கிட்ட விலைபேசித்தான் உன்னையும் என்னையவும் போட்டுத்தள்ள முடிவு செய்து மதுரையில இறக்குனது.
உனக்கு மெசேஜ் அனுப்பினது வேற யாருமில்லை உன் அருமைத்தம்பி சித்தப்பா பையன். என் பிள்ளைங்க உன் வயித்துல இருந்தனால மயங்கி விழுந்து வெளிய வரமுடியாம தப்பிச்சிட்ட.
உன்ன வெளியவரவச்சு அங்கயே ....
அந்தவார்த்யைக்கூட அவனுக்கு சொல்ல முடியல. அதுதான் அவங்க பிளான்
இவனுங்களுக்கு நீ பாவம் பாக்குற.
இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த மோனலுக்கு இப்படியுமா மனுசங்க குடும்பத்துல செய்வாங்க என்றிருந்தது..
சரவணன்" ஆமா சொத்து முழுதும் அவளுக்கு எழுதி வச்சுட்டு போயிட்டுதுங்க பெருசுக இரண்டும்,அத தெரிஞ்சித்தான் மாமா பையன்கிட்ட பேசினேன்,ரஞ்சிதா அத்தையும் இதுக்கு சம்மதிச்சுதான் அவன என்கூட அனுப்பினாங்க என்றான் "
நாயகி ரஞ்சிதாவைப் பார்த்து அடியே கொலைகாரி என் குடும்பத்துல வந்த பேய் நீ. என் தம்பியவும் இப்படித்தான் கென்றிருப்பா,தன் தலையில் அடித்து அழுதார், சுப்பையா பாண்டியன் குடும்பம் எப்படி வாழ்ந்துச்சு இப்படியா நாசமாகபோகனும் என்று.
சரவணன் ராஜபாண்டியனின் மகனிடம் கண்ணசைக்கவும், இருவரும் வாள் போன்ற கத்தியை வெளியெடுக்கவும்,
ஜெபா எல்லாவற்றையும் எதிர்பார்த்து வந்தவன் மோனலை சட்டென தன் பின்பக்கம் இழுத்து நிறுத்திக் கொண்டான்.
அவன்களின் முதல் இலக்கு அவள்தான் என்று ஜெபாவிற்கு தெரியும்.
இப்போ பேசினான் நீ விசப்பாம்பிற்கு பால் வார்க்க நினைச்ச டாலி அது பார்த்தியா எப்படி கோரப்பல்ல காமிச்சி
உன்ன கொல்லத்துடிக்குது என்று சொன்னவன் தன் கையில் மடக்கி வைத்திருந்த கணமான சிறு கத்தியை விட்டெறியவும் அது சரவணனின் மணிக்கட்டைத் தாக்கவும் அவன் கையிலிருந்த வாள் போன்ற கத்தியை கீழே போட்டுவிட்டான் அவன் கையிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது இதைப் பார்த்த ராஜபாண்டியின் மகன் சிறிது பின்வாங்க, சட்டென கீழே படுத்து அவனின் முட்டியில் பின்பக்கம் தாக்கவும் முன்பக்கமா கவிழ்ந்து விழுந்தான், வெளியே போலிஸ் சைரன் சத்தம் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
ஜெபா தன் பிஸ்டலை எடுத்தான்.
நான் உங்கள தற்காப்பிற்கு சுட்டுட்டேன்னு சொன்னாக்கூட இப்போ எனக்கு பிரச்சனையில்லை. எல்லா எவிடன்ஸும் ரெடி பண்ணிட்டுத்தான் வந்திருக்கேன்.
அந்த பாவத்தையும் நினைச்சு நினைச்சி
இவ அழுதிட்டிருப்பா. அதுக்காக மட்டுந்தான் உங்கள கொல்லாம விடுறேன்.
இவன் இப்படி முன் ஏற்பாடு செய்துக்கொண்டு வருவான் என்று யோசிக்கவில்லை கூட வக்கீல் இருக்காங்க என்ற மெதப்புல வந்தானுங்க.
இவர்களின் செயலைக் கண்ணால் கண்டதும் மோனலுக்கு இருந்த கொஞ்ச பாசமும் அப்படியே அத்துப்போச்சுது.
போலிஸ் உள்ள வர்றதுக்கு முன்னாடி உங்கள வேற எதுவும் பண்ணமாட்டேன். ஆனா ஆயுசுக்கும் வெளியவரமுடியாதபடி நிறைய கேஸுங்க உங்கமேல இருக்கு அதுவே போதும் என்றான். அதற்குள்ளாக இவர்களைக் கைது செய்ய போலிஸ் உள்ளே வந்திருந்தனர்.
நாயகி அழுதார் இரண்டு பிள்ளைய பெத்தும் இப்படியா போகனும். நான் செஞ்ச பாவம்போல என அழுது கரைந்தார்.
ரஞ்சிதா மோனலைத்தான் வாய் ஓயாமல் திட்டினார், இருந்த அத்தனை வசைச் சொற்களையும் பயன்படுத்தினார்.
ஜெபாதான் அவர்களை விலக்கி போகச்சொல்லி சத்தமிட்டான் .
மேல உள்ள தன்னுடைய தகப்பனின் அறைக்கு வந்து கட்டிலில் தலைசாய்த்து அழுதாள்.
" ஏம்ப்பா நம்ம குடும்பம் இப்படி ஆகிட்டு தாத்தா நல்லதுதான செய்தாங்க. நீங்க இப்படி என்ன பாதியில விட்டுப்போயிட்டீங்க, சித்தப்பா போயிட்டாரு இருக்கவங்களும் சொத்துக்கு ஆசைப்பட்டு சொந்த அக்காவையே கொல்ல துணிஞ்சு நிக்குறான் " சத்தமா சொல்லி அழுதாள்.
கீழே எல்லா பார்மலிட்டீசும் முடிந்து வந்தவன் கண்டது அழுது புரளும் மனைவியை.
மெதுவாக வந்தவன் அவளது தோளை ஆதரவாக தட்டிக்கொடுத்ணான், இதுவும் நன்மைக்குதான் என மனச தேற்றிக்கோ.
இல்லன்னா இவங்க மேல இன்னும் பாசம் வச்சுருப்ப. அவங்க ஒதுக்கித்தான் வச்சிருக்காங்க மனசளவில இனி நீ பிடிக்க நினைச்சாலும் முடியாது.
என்னோட சொந்தம் அதுதான் உனக்கு நிஜம் அதமட்டும் இனி மனசுல நினைச்சுக்கோ " என்று சொல்லி முடித்தவன்.
அவளது மனநிலையை மாற்ற நினைத்தவன் " இதுதான் உங்க பேரண்ட்ஸ் ரூமா, நல்லாயிருக்கு அதைவிட அமைதியா சாந்தமா இருக்கு."
மோனல் நிமிர்ந்து பார்த்து ஒன்றும் சொல்லாமல் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து கட்டிலில் அமர்ந்தாள்.
அவனும் அவள் பக்கத்தில் அமர சரவணன்,தர்ஷனா போட்டோ நேராக மாட்டப்பட்டிருந்தது. அவ்வளவு அழகா இருந்தது இன்னும் பொலிவு மாறாமல்.
அதையே பார்த்துக்கொண்டிருந்தவள்
ஒன்றுமே சொல்லாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
அப்பாதான் காரணம் இவர்கள் தன்னை ஒதுக்கி வைக்கிறாங்க என நினைத்திருக்க. எல்லோரும் சுப்பையா பாண்டியின் சொத்து தனக்கு வநதிருமோ எனக் கவலைப்பட்டிருக்கின்றார்கள் என்ற உண்மை நெற்றியில் அறைந்து உரைத்தது.
என்னக் கொல்ல வந்தாங்களா, என் குட்டீசுங்கதான் நான் உயிரோட இருக்கவே காரணமா. அன்றைக்கு மயங்கி மட்டும் விழலன்னா என்ன வெட்டிப்போட்டு இருப்பாங்களா என சிந்தனை அவள் உடம்பு லேசாக உதறியது இதை நினைக்கும்போது .
அதை உணர்ந்தவன் அவளை இன்னும் ஆதரவாக அணைத்தான்.
நீ நேற்று தனியா வந்திருந்தா உன் நிலமை என்ன, என்னோட நிலமை என்ன நினைச்சு பாரு. எல்லா ஆபத்துலயும் நம்மள கடவுளும் உன் பெற்றோரின் ஆசியும் தான் காப்பாத்தியிருக்கு. இவங்களோட உண்மையான முகத்தை உனக்கு காமிச்சிக்கொடுத்திருக்கு.
அந்த போட்டோவை வேணா நம்ம வீட்டுக்கு கொண்டு போயிடலாமா எனக் கேட்க மோனலின் கண்களில் மின்னல் சரி எனத் தலையைசைக்க .
அதைக் கழட்டி எடுக்க போக எங்க அவனால முடியல. முடியலடி இந்த போட்டோ யாரு மாட்டினது நீயா எனக்கேட்டான்.
அவள் இல்ல நான் பிறந்ததுல இருந்தே இங்கதான் இருக்கு. ஒருவேலை எங்கப்பா மாட்டி வச்சிருப்பாங்களாயிருக்கும் எனவும்.
ஓ என் மாமனார் மாட்டிவச்சதா. அவர் மாட்டுனத நான் கழட்டிறேன் என்று முயற்சிக்க அவன் கையில் எதோ கிழித்தமாதிரி தோணக் கையை சட்டென உதறிக்கொண்டு பார்த்தான் ஒரு துளி இரத்தம்.
அவனுக்கு ஆச்சர்யம் அவன் கையைப் பார்த்து அப்படியே நிற்க மோனல்தான் எழுந்து கிட்டவந்தவள் அவன் கையைப்பிடித்து பார்த்துவிட்டு.
ஐயோ இரத்தம் என்று தன் துப்பட்டாவை வைத்து துடைத்து பார்க்க கயம்பட்ட எந்த தடமும் இல்லை ஆனால் இரத்தம் வந்திருந்தது.
மோனலுக்கு புரிந்தது ஜெபாவை பார்த்து வலி எதுவும் இருக்கா எனக்கேட்க அவன் " இல்ல டாலி ஏதோ கீச்சது மாதிரி இருந்தது அதான் பார்த்தேன் இரத்தம் இருக்கு காயமும் இல்ல வலியும் இல்ல "
மோனல் " வலிக்காது, அந்த போட்டோ இங்கயே இருக்கட்டும் , "
ஜெபா " ஏன் "
மோனல் " அவங்களுக்கு அது பிரியமில்ல அதனாலதான் காயமில்லாம இரத்தம். நீங்க எடுத்ததுனால இதோட போச்சுது.
ரஞ்சிதா சித்தி எப்பவும் சொல்லுவாங்க சரவணனும் தர்ஷனாவும் இங்கதான் இருக்காங்க, எனக்கு அந்த அறைக்கு போக பயமா இருக்கு, இடிச்சு வேற கட்டித்தாங்கனு கேட்பாங்க, நான்தான் சித்தி அவங்க தேவைக்கு பொய் சொல்றாங்கனு நினைச்சேன். தாத்தவும் ஆச்சியும் அத உணர்ந்த்தாங்கபோல.
தாத்தா சம்மதிக்கவே இல்லை இப்போதான் எல்லாமே எனக்கு புரியுது.
மருமகன் மேல ரெம்ப பாசம் போல அதான் காயமில்லாம இரத்தம் லேசாக முறுவலித்தாள்.
ஜெபாவிற்கு ஆச்சர்யம் போலிஸ் மூளையைக்கொண்டு அங்கு ஆராய்ந்த்தான் அங்கு ஒரே ஒரு ஆணியில்தான் அந்த போட்டோ மாட்டப்பட்டிருந்தது.
அவனுக்கு நம்பவும் முடியவில்லை, நம்பாலும் இருக்க முடியவில்லை
அந்த போட்டோவை அப்படியே விட்டுவிட்டான்.
மோனலிடம் வேற எதுவும் இங்கயிருந்து உனக்கு எடுக்கனுமா எனக் கேட்டான்.
அவள் இல்லை என்க " சரி வா நம்ம கிளம்புவோம் ,பசிக்குது போலிஸ் ஸ்டேசன்ல வேற எல்லா விவரத்தையும் எழுதி கொடுக்கனும் என அவன் முன் செல்ல அவள் திரும்பி அந்த போட்டோவை பார்த்து கைசைத்துவிட்டு வந்தாள். அவளுக்கு இப்போ அங்கவுள்ளது எல்லாமே உயிருள்ளதாக தோன்றியது.
இப்போ ரெம்ப சந்தோசமாக அவனுடன் இறங்கி நடந்தாள். தன் தாய் தகப்பனின் மீதான மனசஞ்சலமெல்லாம் இல்லாது போயிற்று.
ஸ்டேசனுக்கு போயிட்டு கையெழுத்து எல்லாம் போட்டு கொடுத்தவன் அப்படியே ஊருக்கு கிளம்புறோம் என்று வக்கீலிடமும் விடைபெற்று இப்போது
ஹோட்டலில் சாப்பிட உட்காரவும்
அவன் ஆர்டர் செய்தான், இவளும் சில ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்தாள் எல்லாம் வடநாட்டு ஸ்வீட்ஸ் அது, அவன் முழிக்கவும்.
" இதெல்லாம் அம்மா அப்பாவுக்கு பிடிக்கும்னு செய்து வச்சிட்டு என்ன தொடவிடாமா அப்பா வர்ற வரைக்கும் காத்து இருப்போம், அப்பா எவ்வளவு லேட்டா வந்தாலும் சேர்ந்துதான் சாப்பிடுவோம் "என சந்தோச கணங்களை நினைத்து நினைத்து சாப்பிட்டாள்.
அவள் அதிகமா இனிப்பு எடுக்கவும் கண்டித்தான். என்னோட குட்டிஸ்ஸ நான்தான் பார்த்துக்கனும் என அவளைத் தடுத்தான்.
இப்படியாக மதுரைவந்து சேர இரவு ஆகிற்று வரும்போது அவன் தோளிலயே தூங்கிவிட்டாள். விடு வந்ததும் அவளைத் தன் கையிலயே மெதுவாக தூக்கி கொண்டு செல்ல அனுராதா பயந்து கேட்டார்
" என்னாச்சிடா பிள்ளைய இப்படித் தூக்கிட்டு வர்ற "
ஜெபா மெதுவாக சைகை செய்து இருங்க வர்றேன் என சொல்லிவிட்டு அவளை படுக்கையில் கிடத்திவிட்டு தலையணை வைத்துவிட்டு வந்தான்.
வந்தவன் ஒரு மூச்சு அங்க நடந்தவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னவன்.
இறுதியாக மோனலின் பெற்றோரின் போட்டவும் அங்கு நடந்ததையும் சொன்னான் ஆச்சர்யமாக.
அனுராதாவிற்கு ஆச்சர்யம் அவன் கையை பிடித்து பார்த்தவர் காயத்தை தேடினார்.
" ஆச்சர்யம் இல்ல ,காயமே இல்ல இரத்தம் வந்துச்சா எவ்வளவு பாசம் இல்ல "
ஜெபா " ஆமாம்மா ,அவங்க உயிரோட இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் மோனல எப்படி பார்த்திருப்பாங்க ,என்னையவும் பாசமா பார்த்திருப்பாங்க "
அனுராதா சிரித்தார்
" அம்மா நான் எவ்வளவு வருத்தத்துல பேசிட்டு இருக்கேன். நீங்க என்னனா சிரிக்கீங்க "
" டேய், அவங்க உயிரோட இருந்தா நல்லாயிருக்கும்தான், அவங்க இருந்திருந்தா மோனலை எப்படி உனக்கு கல்யாணம் பண்ணி தந்திருப்பாங்க, உன்னைவிட பெஸ்ட்டா நல்ல டாக்டரோ இஞ்ஜினியரையோ பார்த்து கட்டி வச்சிருப்பாங்க " என சிரித்தவாறே சொல்ல
ஜெபா கடுப்பாயிட்டான் உங்ககிட்ட வந்து சொன்னேன் பாருங்க,அப்புறம் நானும் ஒரு இஞ்ஜினியர்தான் (ஆமா அவ்ன பி.ஈ மெக்கானிக்கல் முடிச்சிதான் ஏ.பி.எஸ் பாஸ் பண்ணிருந்தான் ) அத மறந்திடாதிங்க என சொல்லி படுக்க சென்றுவிட்டான்.
அடுத்த நாள் காலை எழும்பிய மோனல் பார்த்தது அவள் ஜெபாவின் கைகளில் படுத்திருந்ததைதான்.
அப்படியே மெதுவாக நகர்ந்து எழும்ப முயற்சிக்க அவன் அவளைப் பிடித்து
" அப்படியே படுடி, அசையாத "
அவள் அப்படியே படுத்தவள் அவன் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க
" மச்சான் முகத்துல என்ன புதுசா இருக்குனு சைட் அடிக்கறியா " கண்ண மூடிக்கொண்டே அவன் கேட்க
அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்..
அத்தியாயம்-24
அசையாமல் கண்மூடி படுத்திருந்தவளின் நெற்றியில் முத்தம் வைத்து எழும்பி ஃபிரஷ்ஷாக போயிட்டான்.
அவளும் அப்படியே எழும்பி கட்டிலில் அமர்ந்திருந்தவள் தன்னாக புலம்பினாள்
" நான் எழும்பினதுக்கு படுக்க சொல்லிட்டு அவங்க எழும்பி போறாங்க. ரூல்ஸ்லாம் நமக்குத்தான் போல போலிஸ்க்கு இல்லைப்போல " என புலம்பியவளின் மேல் சில்லென்று தண்ணீர் விழ நிமிர்ந்து பார்த்தவளுக்கு
அதிர்ச்சி குளித்து முடித்து டவலுடன் வந்திருந்தான், மெதுவாக அவளும் கட்டிலில் இருந்து கீழே இறங்க அவளைப்பிடித்து தன்பக்கமா கொண்டுவந்தவன் .
ரூல்ஸ் நான்தான் போடுறேன் அத ப்ரேக் பண்றதுக்குதான நீ இருக்க. எதையாவது நான் சொன்னது நீ ஃபாலோ செய்துருக்கியா அப்புறமென்ன " என அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன்.போ போய் குளி குட்டச்சி என்றான்.
மோனல் அவள் மூக்கை தேய்த்துக்கொண்டே" நான் ஒன்னும் குட்டச்சி இல்ல நா வளர்த்தி தான். நீங்கதான் அதிகமா வளர்ந்திட்டீங்க. அதுக்கு நான் குட்டையாகிடுவேனா " என வாயடித்துவிட்டு குளிக்க செல்ல.
அவனுக்கு சிரிப்பு இப்படித்தான் அவன் மோனலிடம் எதிர்பார்க்கிறான். தன்ன கேள்வி கேட்கனும்னு ,மனசுல இருக்கறத வெளிய பட்டுனு சொல்லனும்,சண்டை போடனும்னு .( இப்போ பொண்டாட்டி மயக்கத்துல அப்படித்தான் ராசா தோணும் பிறகு பாரு மோனலும் சண்டைப்போடுவா பாரு....
போலிஸ்காரன் நீயே அசந்துருவ )
சிரித்துக்கொண்டே கிளம்பி அமர்ந்திருந்தான். மோனல் வெளியே வரும்போது அவன் அங்கேயேயிருக்க அவனை பார்த்தவள் அவனை
மாதிரியே புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க .....
காவலன் அவன் மயங்கித்தான் போனான். அவ பக்கத்துல போய் நின்றவன் என்ன மும்பை போயிட்டு வந்து என் பொண்டாட்டி ஒரு மார்க்கமா இருக்கா.
என்று அவளை பின்னோடு பிடித்து
தன் நெஞ்சோடு அணைத்துகொண்டான்.
அப்படியே அவளை பிடித்துக்கொண்டு நடந்தவன் கப்போர்டில் இருந்த அந்த
வாழ்த்து அட்டையை எடுத்தவன்,அப்படியே கட்டிலில் வந்து அவளை விட்டான் அவள் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டான்.
அவள் கன்னங்களை தன் கைகளில் தாங்கியவன் மெதுவாக அவளது கண்களைப் பார்த்திருந்தான்.
அவளும் அவன் கண்களைத்தான் பார்த்திருந்தாள். மெதுவாக அவளது நெற்றியில் முத்தமிட்டவன் .
" மன்னிச்சுருடா , பேசாம இருந்து உன்ன வருத்தப்படுத்திட்டேன். நீயும் சொல்லமா இருந்ததும் தப்புதானே. ஆனாலும் நான் உன்ன மன்னிச்சுருக்கலாம் ,பேசினா ரெம்ப சண்டை வரும் இன்னும் காயப்படுத்திடுவனோனு பயந்தேன்டா. அதுதான் என்ன நானே காயப்படுத்திட்டு உன்ன தள்ளி வச்சேன் என சொல்லி அவளது கன்னங்களிலும் முத்தம் வைத்தவன் அப்படியே அவளது பக்கத்தில் அமர்ந்தான்.
மோனலின் கண்கள் கலங்கி முகம் சிவந்திருந்தது ,சிறிது தன் தொண்டயை செறுமி " ரெம்ப கஷ்டமா இருந்துச்சு மறுபடியும் யாருமே இல்லாத வாழ்க்கையா அப்படினு மனசு வெறுத்துப்போச்சுது, நான் என்ன தப்பு பண்ணேன் , போனதடவை மாதிரி இந்த தடவையும் எதுவும் ஆகிருமோ என பயம் உங்ககிட்ட சொல்லி நீங்க வருத்தப்படுற மாதிரி ஆகிடுமோனு பயம். அதான் லேட்டா சொல்லிக்கலாம் என
இருந்தேன் "
" நீ ஒரு காரணத்துக்காக மறச்ச அதுவே தப்பா போயிருந்தா என்ன ஆகியிருக்கும் பாரு அந்த ஒரு மாசம் நம்ம தனிமையில எப்படி இருந்தோம் உனக்கே தெரியும் அத யோசிச்சு பார்த்தியா, நம்ம எவ்வளவு கவனமா இருந்திருக்கனும். அந்த டைம்ல வேற நீ காலேஜுக்கு பஸ்ல ட்ராவல் பண்ண என்னலாம் யோசிக்க வேண்டியது இருக்கு, இது எல்லாத்தையும் விட எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும் அத
யோசிச்சியா ஆகமொத்தம் இரண்டு பேரும் செய்தது தப்புத்தான் "
நான் என் பொண்டாட்டிகிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன் என்று அவன் சட்டென்று கட்டிலில் இருந்து இறங்கி அவள் கைகளைப் பிடித்திருந்தான் மண்டியிட்டவாறே ,அவள் இப்போது இன்னும் சத்தமாக அழவும் பயந்துவிட்டான்.
" ஏன்டி அழற "
" இவ்வளவு நாள் எப்படி உங்களால பேசாம இருக்க முடிஞ்சுது,
நா எவ்வளவு நாள் உங்க முகத்தைப்பார்த்து பார்த்து இருந்தேன் நீங்க பேசுவீங்கனு, நான் பரிசா தந்த காப்பு எங்க, உங்க கையில அது இல்ல என்மேல உள்ளக் கோபத்துல அத கழட்டிதான வச்சீங்க "
என அழுதுக்கொண்டே கேட்டாள்.
தன் தலையில் அடித்துக்கொண்டவன் உன்கிட்ட பேசமா இருந்தது தப்புத்தான்.
நீ குட்டீஸ் விசயம் மறச்சிட்டங்கிற கோவத்துல பேசாம மட்டுந்தான்டி இருந்தேன். உன்ன பார்க்கம இருந்தேனா டெய்லி நீ தூங்கினதுக்கு அப்புறம் வந்து பார்த்திட்டு உன் வயித்தை தொட்டுப் பார்த்திட்டு குட்டீஸ்ங்க கிட்ட பேசிட்டுத்தான்டி போய் படுப்பேன் "
" ஓ அப்போ அது நிஜமா, நான் கனவுனு நினைச்சேன் " என அப்பாவியாக விழி விரித்தவளை என்ன செய்ய.
" ஆமான்டி, தூங்குமூஞ்சி, கையில உன் தம்பி வெட்டுன காயம் சின்னது, ஆனா ஆழமா பட்டிருந்துச்சு அதனால தான் இடது கையை காமித்தான். அந்த காப்பு அதுல படும்போது உறுத்தல் அதுதான் கழட்டி வச்சிருக்கேன் என்று சொன்னவன் அதை எடுத்து தன் வலதுகையில் இப்போது போட்டுக் கொண்டான். இப்போ போதுமா ஓகே வா எனக்கேட்டான் "
அவள் சந்தோசமா தலையசைக்க அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளது வயிற்றினைத் தொட்டு தொட்டு பார்த்தான்.
அவளுக்கு சிரிப்பு நீங்க இப்படி பண்றது எனக்குத்தான் கூச்சமா இருக்கு பேசாம இருங்க என அதட்டால் போடவும் நல்லபிள்ளையா இருந்தவன்.
அவளது காதில் பிள்ளைங்கள தொந்தரவு பண்ணல அவங்கம்மாவ தொந்தரவு பண்ணலாமா என்றுக்கேட்க
கையில் ஒரு அடிப்போட்டவள் வாயில் விரலை வைத்து ஸ்ஸ்ஸ் சத்தம் போடாம இருங்க, காலையிலயே என்ன பேச்சு கண்களை உருட்டி அதட்ட ,
ஜெபா அவளைத் தன்பக்கமாக இழுத்து கைவளைவில் வைத்து கொண்டான்.
ஜெபா "டாலி "
மோனல் " ம்ம்ம் "
" ஒரு முத்தம் கிடைக்குமா மச்சானுக்கு "
மோனல் " ஹான் "
ஜெபா " உனக்கு நான் என்ன லட்டா ஊட்டிவிடுறேன் ,இப்படி வாயத்திறக்க என் பொண்டாட்டி என அவளின் திறந்த வாயை தன் வாயல் தாளிட்டான்.
கண்களைவிரித்து அவனைப்பார்க்க
அவன் கண்கள் மயக்கத்தில் ,அவள் அவனோட உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு ஈடுகொடுத்தாள்.
அவனது கைகள் அவளை மெதுவாக நாகர்த்தி படுக்கையில் கொண்டுவிட்டன.
அவளை மெதுவாக விடுத்தவன் டாக்டர்கிட்ட அன்றைக்கு நிறைய பேசினனே நீ கேட்கல .
மோனல் " இதப்பத்தியா எப்போ,ஐய இதையெல்லாமா கேட்பாங்க. நீங்க என்ன உங்க கைய பிடிக்கவிடலைனு வருத்தத்தில கவனிக்கல "
ஜெபா " சாரி ரெம்ப கோவம் அதன் வெளிப்பாடுதான் அது மன்னிச்சுடு டாலி
என இப்போது அவளது கையைப்பிடித்து முத்தமிட்டான் "
அன்றைக்கே எல்லாமே தெளிவா கேட்டுட்டு வந்திட்டான் இந்த மச்சான் என்று கண்ணடித்து தன் காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.
மோனல் ஒன்றும் பேசாமலயே அவனது கண்களைப்பார்த்து இருந்தவள் கண்சிமிட்டி தலையை சாய்த்து சிரித்தாள் ,தீரன் மொத்தமாக அவளிடம் விழுந்தான்.
அவனது கைகளில் இப்போது அவள் பாவையாக , அவனுக்கு மறுக்காமல் விலகாமல் தன்னைக்கொடுத்தாள்.
மறுபடியும் குட்டித்தூக்கம் போட்டு மோனல் மட்டும் எழும்பி வந்தாள்.
அனுராதா கேட்டாள் என்னடா லேட்டா வர்ற காலேஜ் இல்லையா என்று .
அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை " அனுமா அது வந்து இன்னைக்கு லீவ் போட்டுட்டேன் "
அவருக்கும் புரிந்ததோ என்னவோ வேறு ஒன்றும் கேட்காமல் அப்படியே அவளுக்கு சாப்பாடு எடுத்து வைத்தவர், அவனையும் எழுப்பிவிட்ருடா எதோ ரிப்போர்ட் குடுக்கபோகனும்னு சொன்னான் என்று சொன்னவர் நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்டா
என வெளியேக் கிளம்பினார்.
ரூமிற்குள் வந்தவள் தலையனை எடுத்து அவனை மொத்தி எடுத்துவிட்டாள்.
என்னடி இது காலையில மச்சானுக்கு மசாஜ் பண்ற என்று திரும்பி படுத்து தூக்கத்தை தொடரவும் ,தண்ணி எடுத்து அவனது முகத்தில் ஊத்திட்டா ,பிறகுதான் யோசித்தாள்
ஐயோ கோவத்துல திட்டுவாங்களோ என பயந்து நின்றாள்.
அவன் எழும்பியவன் காலையிலயே நல்ல அபிஷேகம். என்னம்மா கோவம் என்மேல என்று கேட்டுக்கொண்டே எழும்பியவன் ,அவளது சேலையில் தன் தலையை துவட்டினான் .
அவளை இறுக பிடித்து வைத்து " அப்படி என்ன மச்சான்மேல கோவம் ,என்க"
அது அனுமா கேட்டதுக்கு பதில் சொல்லமுடியாம தினறிட்டேனா அந்த டென்சன்ல என குனிந்துக்கொண்டாள்.
ஜெபா சிரித்துக்கொண்டே " உங்க அனும்மா அப்படி என்னக் கேட்டாங்க "
மோனல் " அது அது ஏன் லேட்டுனு கேட்டாங்க அதான், பதில் என்ன சொல்ல முடியும் "
ஜெபா " சொல்லவேண்டியதுதான உங்க பிள்ளையினாலதான் லேட்டு என "
மோனல் " சீ வாயபாரு ,எப்பவும் தப்புதப்பா பேசிக்கிட்டு, ஐஞ்சுமாசம் முடியப்போகுது அதுவும் ட்வின்ஸ்,நீங்க என்னனா "என சொல்லி வெட்கப்பட்டாள்.
கேட்டுக் கொண்டிருந்தவன் சரிவா அப்படியே என்னை குளிப்பாட்டி விடு நீதான நனைச்சிவிட்ட என்று அவள் கையைப்பிடித்து இழுக்க
மோனல் " இன்னும் ஐஞ்சு மாசத்துல இரண்டு பிள்ளைக்கு அப்பாகிடுவீங்க,
சின்ன பிள்ளை மாதிரி விளையாட்டப் பாரு விடுங்கப்பா " என்க
அப்படி சும்மா விடுற ஆளா அவன் எத்தனை பிடிக்கும் ஜித்தன்
"குளித்து முடித்து வெளியவந்தவனை முறைத்துக் கொண்டிருந்தாள் ,என்னையும் நனைச்சி விட்டுட்டீங்க .இன்னைக்கு என்னாச்சுது ரெம்ப சேட்டை பண்றீங்க உங்களுக்கு யாரு லீவு தந்தது இன்னைக்கு நீங்க கிளம்பி ட்யூட்டிக்கு போங்க என்று விரட்டினாள்"
அவளும் வெளியே வர்ற ஆனந்தராஜ் காரில் வந்திறங்கினார் ட்ரைவர்
வைத்து வந்திருந்தார்.
" வாங்கப்பா எப்படி இருக்கீங்க, ஃபோன் பண்ணவே இல்லை, என்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தாள்,அதற்குள்ளாக ஜெபா வரவும் தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தான்.
அம்மா கடைக்குபோறேன்னு போனாங்க இருங்க என்று சொல்லவும் அனுராதா நிறைய பொருட்களுடன் வந்திறங்கினார்.
ஜெபா கிளம்பி வெளியே வந்தவன்
" ப்பா நான் என் டிபார்ட்மெண்ட் வரைக்கும் போறே நேத்துக்குள்ள ரிப்போர்ட் குடுக்கனும்போயிட்டு வர்றேன் " என்று கிளம்பி சென்றுவிட்டான்
அப்படியே மதிய சாப்பாடு முடிந்ததும்.
சமையல் பண்றவங்களுக்கு வாங்கியத்துணி,கொஞ்சம் பணமும் வைத்து மோனலிடம் கொடுத்து குடுக்க சொன்னார் அனுராதா.
ஒன்னும் புரியலை என்றாலும் சொன்னதை செய்தாள்.
மதியத்திற்கு மேல் ஜெபா உனக்கு தேவையானதை எடுத்து வை நம்ம ஊருக்கு போறோம் உன்ன கொண்டு விட்டுட்டு வர்றேன் என்றான்.
அவள் அப்படியே கட்டிலில் அமரந்தவள் " எதுக்கு நான் போகலை இங்கயே இருக்கனே ,உங்ககூடவே ப்ளீஸ் " என்றாள் .
" இல்லடா உன்ன தனியா விட்டுட்டு போகனும் நீ எப்படி இருக்கியோ என தவிப்பா இருக்கும். இங்க நம்ம வேலை வேற ரிஸ்க்கான வேலை .
இப்படியே உனக்கு ஊருதான் பாதுகாப்பாயிருக்கும். புரிஞ்சுக்கோ என்ன சுத்தி எவன் வர்றான் என்ன நோக்கத்தோட வர்றானு தெரியாது சரியா "என்க
" நான் உங்கள தொந்தரவு பண்ணமா இருப்பேன், வெளிய எங்கயும் போகமாட்டேன்,காலேஜ் விட்டுறேன், உங்ககூடவே இருக்கேன் என்று சொல்லவும்
அவனுக்கே மனசு ஒருமாதிகரி ஆகிட்டு,
சின்னபிள்ளை மாதிரி அவன் முகத்தையே
பார்த்திருந்தாள்.
அவளது முன் மண்டியிட்டு அமர்ந்து
" ப்ளீஸ்டா என் செல்ல டாலில ஊருக்குப்போவோம், நானும் உன்ன ரெம்ப மிஸ் பண்ணுவேன், உனக்கும்,நம் குட்டீசுக்கும் நல்லதுடா சரியா "
மோனல் அமைதியாக இருந்தாள்.
"என்னடா கோவமா " என்று ஜெபா கேட்கவும் இல்லை எனத்தலையசைத்தவள் 'உங்கள ரெம்ப மிஸ் பண்ணுவேன் '
அப்படியே எல்லாரும் கிளம்பி ஊருக்கு வந்தாகிற்று. ஜெபா வராத்திற்கு ஒருமுறை வந்து அவளுடன் இருந்து செல்வான். வரும்போதெல்லாம் அவன் டாலியை விட்டு அங்குமிங்கும் நகரமாட்டான் மோனலின் வாசம் அவனுக்கு வேண்டும், அவளிடமே ஒன்டிக்கொள்வான்.
நாட்கள் கடந்து செல்ல ஏழாவது மாதம் வளைகாப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தான். வயிறு பெரியதாக இருக்க இப்பவே செய்திடுவோம் என பெரியவர்கள் யோசனை செய்து முடிவு செய்திருந்தனர்.
வளைகாப்பு அன்று முன்பக்கம் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து மோனலுக்கு அவ்வளவு ஆனந்த சந்தோசம் அவள் எதிர்பார்க்கவேயில்லை.
கண்களிரண்டும் தானாக தன்னவனைத்தான் தேடியது.
அத்தியாயம்-25
மோனலின் பார்வை சுற்றி சுற்றி கனவனைத்தேடியது,அங்கே நின்றிருந்த கனவனை கண்டவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை
கண்களில் கண்ணீர் அவளருகில் நின்ற சாரதா அதட்டினார், நல்ல நேரத்துல இப்படி அழாத கண்ணீரை துடை என்றார்.
மேடையின் முன் அமர்ந்திருந்தது அவளுடைய அம்மாச்சி அதாவது தர்ஷனாவின் அம்மாவும்,அவளது தம்பி,தங்கையின் குடும்பம் எல்லாரும் வந்திருந்தனர்,வளர்ந்து பெரிய பெரிய பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்தனர்.
ரிசப்ஷன் சமயத்தில் தன் உறவுகள் யாருமில்லாமல் தனியாக மனசஞ்சலத்தோடு இருந்தது.
இப்போ என் சொந்தங்கள் எல்லாம் என் கண்முன்னே கொண்டுவந்த நிறுத்தி சந்தோசப்படுத்திய தன்னவனுக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றேன் நான்.
கல்யாணா புடவை கட்டி அவ்வளவு நகைகளும் போட்டு சந்தனம் குங்குமம் கன்னத்தில் தடவியது என மோனல் அவ்வளவு அழகு பதுமையாக இருந்தாள். தாய்மையில் எப்போதுமே பெண்கள் அழகுதான் இப்படி பார்க்கவும் ஏற்கனவே தலைகுப்புற விழுந்தவன் இப்போ சொல்லவா வேணும் பார்வையெங்கும் பாவயாளை சுற்றியே.
அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள் அவ்வளவு கண்வைத்தாள் தன் கனவனை,பின்பு அவனையும் அவளருகில் அமரவைத்து மாலையிட்டு எல்லாம் அவளுடைய முறைமையின்படியே அனிஷா பார்த்து பார்த்து செய்தாள்.
தர்ஷனாவின் குடும்பாத்தாரை மேடைக்கு அழைத்து எல்லாமுறைமையும் செய்வைத்தார்கள்.
அவர்களுடன் அவள் சரளமாக மராத்தியில் உரையாட சுத்தியிருந்தவர்களுக்கு புரியாவிட்டாலும்
அவ்வளவு அழகா இருந்தது.
அவர்கள் அவளுக்கு பச்சை வளையல்கள் அங்கியிருந்தே கொண்டு வந்திருந்தனர். அவர்கள் அந்த வளையலை போடவும் மோனலுக்கு அவளின் அம்மா போட்டிருந்ததுதான் நியாபகம் வந்திருந்தது. கண்கள் கலங்கினாலும் மறைத்துக்கொண்டு சிரித்தாள்.
கனவனவன் கண்டுக்கொண்டு முறைத்தான். அவளும் தன் தலையாட்டி அழமாட்டேன் என்று அவனுக்கு சமிக்ஞை செய்தாள்.
எல்லாவிருந்தும் முடிந்து ஒவ்வொருத்தராக வந்து வளையல் போடப்போட அவள் கையே நிறைந்துவிட்டது. அவ்வளவு சொந்தங்களும் வந்திருந்தனர்.
அனுராதாவும் சாராதவும் தங்கவளையல்தான் போட்டுவிட்டனர்.
வளைகாப்பு அன்று வரக்கூடிய எல்லா தங்க,வெள்ளிப் பரிசுகளும் அப்படியே எடுத்து வைத்துக்கொண்டு அதை குழந்தை பிறந்தபின் அவர்களுக்கு நகைகளாக செய்கின்ற பழக்கம் உண்டு.
அதனால் அங்கு சூல்காப்பு என்று கடைகளில் கேட்டால் கிடைக்கும். அதைதத்தான் பயன்படுத்துவர் பொதுவாக அது கைநிறைய இருக்கும்.
சுனிதா வீட்டிலும் ,அர்ஷாத் வீட்டிலுமிருந்தும் தங்க வளையல்களே அணிவித்தனர்.
இறுதியாக ஜெபா மொத்தமாக ஒரு பாக்ஸ், அழகாக வடிவமைக்கப்பட்ட தேக்கிலான பெட்டியைக்கொடுத்தான்.
கொடுத்தவன் சொன்னான் இதை நம்ம பிள்ளைங்க பிறந்தபிறகுதான் திறக்கனும் என்ற கட்டளையோடு கொடுத்தான்.
அவள் என்ன மச்சான் நீங்க இப்போ கிஃப்ட் தந்துட்டு பின்னாடி திறந்து பார்க்க சொல்றீங்க இது சரியில்லை என்று சினுங்க.
அந்த சினுங்கள்களே சொன்னது அவர்களின் அந்நியோந்நியத்தை.
அப்படியே எல்லாவற்றையும் வீடியோஸ்,ஃபோட்டோஸ் என்று எடுத்து தள்ளியிருந்தனர்.
சாப்பிட சென்ற பிறகுதான் பார்த்தாள் அன்று ஹோட்டலில் அவள் சந்தோசத்தில் ஆர்டர் செய்த மராத்தி ஸ்வீட்ஸ் இலையில் இருந்தது.
" மச்சான் என் பக்கத்தில் தனியா இரண்டு இலைபோட்டு இந்த ஸ்வீட்ஸ்லாம் வைங்களேன். என்னோட ஆசைக்காக ப்ளீஸ் " என்று கைவிரல்களை மொட்டுபோல குவித்து கெஞ்சினவளின்
சைகையைப் பார்த்து சிரித்தவன் ,
அங்க நின்றிருந்தவர்களை அழைத்து இரண்டு இலை வைக்கச்சொன்னான்,அதில் அத்தனை பதார்த்தங்களையும் வைத்திருந்தனர்.
தன் பெற்றோருக்காக,கண்டிப்பா அவங்க என்ன ஆசிர்வதிப்பாங்க என்று நினைத்தாள், மோனலுக்கு ரெம்ப திருப்தி.
அவளின் காதருகில் பப்ளிக்ல இருந்து இப்படி கெஞ்சாதடி சாகசக்காரி,அப்புறம் மச்சான் கடிச்சு வச்சுறுவேன் பார்த்துக்கோ என்று அவளை வம்பிழுத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள்.
எல்லாம் நல்லபடியாக முடித்தது வீட்டுக்கு கிளம்பும்போது, அம்மாச்சியை எங்க என பதட்டத்துடன் எல்லோரையும் தேடினாள்.
ஜெபாதான் எல்லாரையும் நம்ம வீட்டுக்கு
கூட்டிட்டு போயச்சுடா.... அவங்க பத்திரமா இருக்காங்க.
நீ இப்படி டென்சனாகதடி ..எனக்குத்தான்
பிபி ஏறுது என்றான்.
சொன்னதும் தான் யாரு இருக்கா இல்லைனு அவள் பார்க்கவே இல்லை சட்டென அவனை எக்கி கன்னத்தில் முத்தமிட்டிருந்தாள்.
நன்றி மச்சான் என கைகூப்பி தொலைஞ்சு போயிட்டுனு இருந்த சொந்தங்களை தேடித்தந்ததற்கு, என்று கண்ணீருடன் சொல்லவும் அங்கியிருந்த அத்தனைபேரின் கண்களும் நிறைந்திருந்தது.
அவளை அப்படியே தன்னோடு அனைத்துக்கொண்டான் " என்னடி இது என்ன இப்படி அழவைக்குற என சொன்னவனின் கண்களிலும் கண்ணீர்.
அங்கிருந்த பெரியவர் ஒருவர்தான் என்ன மக்களே நல்ல விசேஷம் நடந்தநேரத்துல கண்ணீர் வரலாமா.
சந்தோசத்தோடு வீட்டுக்கு கிளம்புங்க்க, நல்லபடி குழந்தைப்பெற்று வர எல்லாரும் வாழ்த்தி பிரார்த்தனை பண்ணி வீட்டுக்கு அலைச்சிட்டுப்போங்க என்றார்.
அப்போதுதான் எல்லாரும் சுதாரித்து
மோனலை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
அங்க தர்ஷனா குடும்பம் மொத்தமும் இருந்தனர். அவர்களுடன் பேசி அவங்க சித்தியோட பிள்ளைங்க ,தாய்மாம இருவரின் பிள்ளைகள் என ஒரு பட்டாளாமே இருந்தனர்.
அவளோட சித்தி பெண்ணிற்கு கல்யாணம் முடிந்து பிள்ளையே இருந்தது மராத்தியர்கள் குறைந்தது பதினெட்டுலயாவது கல்யாணம் முடிச்சுடுவாங்க.
போய் அவளோட அம்மாச்சி மடில படுத்துக்கொண்டாள். எல்லோரும் அவளிடம் பேசிக்கொண்டிருக்க வீட்டில் எல்லோருக்கும் ஒன்றும் புரியவில்லை என்றாலும்,
ஜெபாவிடம் ஜீவா " சீக்கிரம் இந்த பாஷையை படிச்சிரு இல்லனா உன்ன திட்டினாலும் புரியாது "
ஜெபா " சும்மாவே அவ அந்த பாஷையிலதான் திட்டுறா.என்ன புரியாவிட்டாலும் என்பொண்டாட்டி கெட்ட வார்த்தை பேசாமாட்டானு நம்பிக்கையில அர்த்தம் தெரியலனாலும் கேட்டுக்குறேன் " என்று சொல்லி சிரிக்கவும் அனுராதா வந்து இரண்டு பேரும் மண்டையிலயும் கொட்டு வைத்து பேச்சைப்பாரு இப்பதான் அவ நல்ல சந்தோசமா இருக்கா,என சொல்லவும்.
இந்த மாமியார் மருமகள் சண்டையெல்லாம் சீரியலல்தானா நம்ம வீட்ல வராதா என ஜீவா அப்பாவியாக் கேட்க சாருவும் அனுராதவும் ஆளுக்கு இரண்டு முதுகுல போட்டு கண்ணு வைக்காதிங்கடா எங்கள பார்த்து என்று சொல்லி முறைக்கவும் வீடு அவ்வளவு கலகலப்பாக இருந்தது.
மோனலின் அம்மாச்சி எழுந்து வந்து அனுராதாவின் கைகளை பிடித்துக்கொண்டு பேசினார் மோனல் மொழிப் பெயர்த்தாள் " என் பிள்ளைய பறிக்கொடுத்துட்டு மோனலையாவது எங்ககிட்ட கொடுங்க நாங்க வளர்த்துக்கேறோம்னு கேட்டோம், அதுக்கு இவங்க தாத்தா வேண்டாம் என் பிள்ளை நியாபகமா இவதான் இருக்கா, எங்ககிட்டயே இருக்கட்டும்,அதுவும் இல்லாமா உங்ககிட்ட வசதி பத்தாது பிள்ளைக்கு எதுனாலும் கஷ்டம் தரமாட்டேன் என சொல்லிட்டாரு.
நாங்க அங்க இருக்க பிடிக்காம எங்க சொந்த ஊருக்கே போயிட்டோம், இடையில ஒரு தடவை வந்து பார்க்க முயற்சி செய்தோம் விடமாட்டேனுட்டாங்க, அப்புறம் ஹாஸ்டல்ல விட்டுட்டாங்க அங்க எங்களால போக முடியல "என கண்கலங்கினார்.
அவங்ககூட சண்டை போட்டு பிள்ளைய வாங்குறளவுக்கு நாங்க இல்லை.
ஒவ்வொரு நாளும் நினைப்பேன் பிள்ளை எங்கயிருக்கோ எப்படி இருக்கோ என கலக்கமா இருக்கும்.
ஆனா இங்க வந்து பார்க்கும்போது சந்தோசம் ஜெபாவின் தாடையை பிடித்து நல்ல பையன் மோனலுக்கு கிடைச்சிருக்காங்க என்றவர்."
கைகூப்பி நன்றி எங்க பிள்ளைய நல்ல பாத்துக்கோங்க என்றார்.
மோனல்தான் அவரின் கையை பிடித்தாள் வேண்டாம் என்று ஜெபாவும் கிட்டவந்து அவரைப் பிடித்துக்கொண்டான்.
இப்படியாக நிறையபேசியவர்கள் தூங்குவதற்காக செல்ல,
இரவு சாப்பாடும் முடிந்து
மோனல் ஜெபாவிடம் வந்தவள் அவனை பின்னாக இருந்துக் கட்டிக்கொண்டாள்.
ஜெபா " ஏய் இருடி வயிறு இடிக்கப்போகுது ,மெதுவா "
அவன் சொன்னதெல்லாம் அவ காதுக்கு கேட்கவே இல்லை. இன்னும் இறுக்கமாக கட்டிபிடிக்க அவன்தான் அவள் கையைபிடித்துகொண்டே அவன் மெதுவாக திரும்பியவன்,
" என்ன மேடம் ரெம்ப ஹாப்பி மூடுல இருக்கீங்க போல "
மோனல் எதுவும் பேசாமல் அப்படியே அவனோடு சாய்ந்து நிற்க அவன்தான் அவளை நடத்தி கட்டிலில் உட்கார வைத்தவன்.
மோனல் " எப்படி கண்டு பிடிச்சிங்க, அதைவிட இத்தனைபேரையும் எப்படி கூட்டிட்டு வந்தீங்க "
ஜெபா " இந்த ஐ.பி.எஸ் னால முடியாததுனு எதுவுமில்லை,அங்க விசாரிச்சா அதுவும் போலிஸ் விசாரிச்சா முடியாதா ,ஆன என்ன ஒரு ஒரு மாசமாகிட்டு "
மோனல் சநாதோசத்ணில் சிரித்துவிட்டாள். அம்மாச்சி பாவம்லஎவ்வளவு சாஃப்ட் அவங்க.
ஜெபா " அவங்க எல்லாருமே ரெம்ப உமைதியான குணம் இல்ல " என்று சொல்லியவன்,அவளை மெதுவாக அழைத்தான்.
" டாலி "
மோனல் நிமிர்ந்து பார்க்க,அவள் கண்களில் தன் ஈர உதடுகளை லேசாக ஒற்றி எடுத்தான்.
அவள் கண்களாலயே அவனை ஊடுருவிப் பார்த்தாவள் அவன் உயிருக்குள் அப்படியே சென்றுவிடுவோமா என்று காதல் கொண்டு பார்த்திருந்தாள், அவனது நெஞ்சில் தன் ரோஜா இதழால் பனித்துளியாக முத்தங்களை சிந்திக்கொண்டிருந்தாள், அந்த குளிர் அவனது உயிரை சில்லிட செய்தது.
வார்த்தைகளற்ற நன்றி நவிழ்தல் அங்க அரங்கேறிக் கொண்டிருந்தது.
அவளது வயிற்றினைத் தொட்டுப்பார்க்க
பிள்ளைகளின் அசைவு இப்போது நன்றாக தெரிய ஆரம்பித்திருந்தது.
ஜெபா உருகிப்போனான் பிள்ளைகள் எப்போ பிறக்கும் என்ற பேராவல்.
அவளுக்கு மெதுவாக வயிற்றினைத்தடவி கொடுத்தவன் தூங்கப்போக.
மோனல் மச்சான் என்று அழைக்க அழைப்பே வித்தியாசமாக இருக்க,என்ன என்ற கேட்டு திரும்பியவனிடம் அதீத நெருக்கத்தை காண்பித்தாள்.
டாலி என்னாச்சு உனக்கு ,நீ சரியில்ல இன்னைக்கு பேசாமபடுத்து தூங்கு என்று தூங்க முயற்சிக்க மறுபடியும் அவன் மார்பில் படுத்துக்கொண்டு மச்சான் என்க,அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
ஆஆஆஆ..வலிக்குதுடி டாக்கி..ஏன்டி இப்படி கடிச்சு வச்ச என்று எழும்பி உட்கார்ந்து தன் சட்டையில்லாத நெஞ்சில் தடவிக்கொண்டிருந்தான்.
மோனல் நாக்கை கடித்து சாரி லேசா கடிக்கனும்னு பிளான் பண்ணேன்.நீங்க கூப்பிட்டதுக்கு பதில் தரலையா அதான் கொஞ்சம் அழுத்தமா கடிச்சு வச்சேன் என்க.
அவளைப்பார்த்தவன் அப்படியே தனக்குள் சருட்டிக்கொண்டு அவளுக்கு
தன்னை கொடுத்து அவளை எடுத்து பண்டமாற்றிக்கொண்டான். அவனுக்கும் பயமே இருந்ததாலும் அவளும் ஆசையோடு இணங்க உயிரின் தேடல்கள்,முத்தபரிமாற்றங்கள் ,இணைக்கு இணை சுகவாசியாக மாறிப்போனார்கள்.
ஜெபா காலையில் எழுந்து மதுரைக்கு போகனும் எல்லாம் ரெடி பண்ணனும் இந்த இராட்சஷி இராத்திரி பண்ண வேலையில எல்லாம் மறந்து தூங்கியாச்சுது என அவசர அவசரமாக கிளம்பி வெளிய வர இன்னும் மோனல் தூக்கம் ,
அவளது சொந்தங்களை இரண்டு நாட்கள் இருக்கசொல்லி எல்லாம் ஏற்பாடு செய்துக்கொடுத்தவன் மறுபடியும் அறைக்குள் வர இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் .
அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தவன். அப்படியே அம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
இரண்டு நாளில் மோனலின் குடும்பமும் இருந்து கன்னியாகுமரி எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு கிளம்பிவிட்டனர்.
இப்போது அவர்கள் குடும்பம் மட்டுமே
மோனல் கோவத்தில் இருந்தாள். கனவன் அவளிடம் சொல்லாமல் சென்றுவிட்டான் என்று .
எல்லாரும் சென்றதும் வெறுமையாக உணர்ந்தாள் அவளது ஹார்மோன்களின்
ஏற்றயிறக்கத்தினால் அவளின் மனநிலையும் மாறிக்கொண்டிருக்க,
ஜெபா ஃபோன் செய்தும் எடுக்கவில்லை
அவனுக்கு அங்க அவனின் வேலையின்
நிமித்தம் உடனடியாக வரவும் முடியாது.
பத்து நாள் கழித்தே வந்தான்.
அவனிடம் பேசாமல் சிறிது முறுக்கி கொண்டாலும்,அவனைப்பார்த்ததும் அவளது முகத்தில் தானக புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
சுனிதா " என்ன மோனல் பத்து நாள முகம் ப்யூஸ் போன பல்ப் மாதிரி இருந்திச்சு. இன்னைக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டு மாதிரி ஜெகஜோதியா மின்னுது, என்ன ரகசியம்,எல்லாம் ஜெபா தம்பி கைங்கரியமா,என்சாய் " என்று அவளை
பரிகாசம் செய்தாள்.
மோனல் " போங்கக்கா,பெரிய மச்சான் இல்லனா நீங்களும் இப்படித்தான "
சுனிதா " ஆனாலும் உன்னளவுக்கு இல்லமா "
கிட்சன்ல இவா மட்டும் சேர் போட்டு அமர்ந்திருக்க அனுராதாவும்,சுனிதாவும் வேலை செய்துக் கொண்டிருந்தனர்.
" டாலி " என்று கனவன் அழைக்கவும் அவசரமாக எழும்ப தடுமாறி விழப்போக
இரு பெண்களும் பதறி அவளைத் தாங்கினர்.
இங்கு கேட்ட சத்தத்தில் ஜெபாவும் ஓடிவர மோனலை அனுராதா பிடித்து உட்கார வைத்தவர், மகனை வார்த்தையால் வறுத்தெடுத்துவிட்டார்.
உனக்கு எதுவும் தேவைனா நீ வந்து எடுத்திட்டுப்போகனும் அவள இப்படியா சத்தமா கூப்பிடுவா,என்று.
அனுராதா ரெம்ப டென்சாகிவிட்டார். ஜெபாதான் என்ன நடந்தது எதுக்கு அம்மா திட்டுனாங்க என்று எதுவும் தெரியாமல் விழித்தான்.
மெதுவாக மோனலைப் பார்க்க அவளுக்குமே சிறுபடபடப்பு, விழுந்திருந்தா என் நிலைமை என்ன,என கையை தானக வயிற்றில் கைவைத்துக்கொண்டாள்.
சுனிதா " தம்பி அவ சேர்லயிருந்து அவசரமா எழும்பவும் கீழ விழப்பார்த்தா,அதான் அத்தை பயந்திட்டாங்க, நீங்க அவள மெதுவாக கூட்டிட்டுப் போங்க " என்றாள்.
சுனிதா சொன்னதைக்கேட்டு அவனுக்குமே பயம் வந்திட்டு அவளை மெதுவாக அழைத்து அறைக்குள் விட்டான் மோனல் இன்னும் சரியாகவில்லை.
இப்போது அவளுக்குள் ஒரு பயம் வந்தது...
ஜெபாதான் அவள் முதுகை தடவி அவளை சமன் படுத்தினான். இரண்டு குழந்தைகள் வயிறு வேற கொஞ்சம் பெருசாக இருக்க அதனால நடக்கும் போது கஷ்டப்படுவா, இப்போ வேற இந்த நிகழ்வுன்னா உடனே ரெம்ப பயந்தாள்.
மீதமுள்ள இரண்டு மாதங்களும் ரெம்ப கவனமா இருந்தா,ஆனாலும் வாக்கிங்க் டெய்லி அனுராதா கூட அழைச்சிட்டு போவார்.
நார்மலா குழந்தைங்க பிறக்கனும்னு வீட்ல இருக்க எல்லாருமே வேண்டுதல்தான் வைத்தனர்.
திடீரென ஜெபாவிற்கு ஜீவா அழைத்து மோனலை மருத்துவமனையில் சேர்த்திருக்கு கிளம்பி வா, மோனலை சமாளிக்க முடியல என்று.